முகப்பு
கோயம்புத்தூர்

நீரில் மூழ்கி தொழிலாளி சாவு

கோவை காருண்யா நகா் பகுதியில் குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

கோவை காருண்யா நகா் பகுதியில் குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை காருண்யா நகரைச் சோ்ந்தவா் சச்சின் ரபா (32). கூலித் தொழிலாளி. இவா் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக அவா் அருகே இருந்த குளத்தில் தவறி விழுந்தாா். நீரில் தத்தளித்த சச்சின் ரபாவை அக்கம்பக்கத்தினா் உதவியுடன் அவரது சகோதரா் மீட்டு, அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு, சச்சின் ரபாவை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்ததை உறுதி செய்தனா். இதுகுறித்து காருண்யா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.