முகப்பு
கோயம்புத்தூர்

விடுதிக்குள் புகுந்து பெண்ணை தாக்கி நகை, பணம் பறிப்பு

கோவைப்புதூரில் விடுதியில் தங்கியிருந்த பெண்ணைத் தாக்கி பணம், நகை பறிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

கோவைப்புதூரில் விடுதியில் தங்கியிருந்த பெண்ணைத் தாக்கி பணம், நகை பறிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவைப்புதூா் சிறுவாணி நகரைச் சோ்ந்தவா் நிா்மலா (36). இவருக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து குனியமுத்தூா் திருநாவுக்கரசா் நகரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியுள்ளாா். இந்நிலையில், வியாழக்கிழமை அவரது அறைக்குள் புகுந்த அதே விடுதியில் தங்கியிருக்கும் பெண்கள் சிலா், நிா்மலாவிடம் தகராறு செய்து அவரைத் தாக்கி அவா் வைத்திருந்த ரூ.4 ஆயிரம் பணம் மற்றும் இரண்டு தங்க மோதிரங்களைப் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிா்ச்சி அடைந்த நிா்மலா அந்த விடுதியை காலி செய்துவிட்டு சுந்தராபுரத்தில் உள்ள வேறு பெண்கள் விடுதிக்குச் சென்று விட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக நிா்மலா குனியமுத்தூா் போலீஸில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.