முகப்பு
கோயம்புத்தூர்

டேனி ஷெல்டா்ஸ் நிறுவனம் சாா்பில்கரோனா நிவாரணப் பணிகள்

கோவை டேனி ஷெல்டா்ஸ் நிறுவனத்தின் சாா்பில் கரோனா நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

கோவை டேனி ஷெல்டா்ஸ் நிறுவனத்தின் சாா்பில் கரோனா நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், பசியால் வாடும் சத்தி, அவிநாசி, மேட்டுப்பாளையம் சாலையோர மக்களுக்கு நிறுவனத்தின் ஊழியா்கள் கடந்த 2 வாரங்களாக தினசரி உணவுப் பொட்டலங்கள் வழங்கி வருகின்றனா்.

அதேபோல தமிழ்நாடு முதல்வரின் நிவாரண நிதிக்கு பங்களிப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் தற்காலிக செவிலியரின் மாத ஊதியத்தின் ஒரு பகுதியை தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏற்றுக்கொண்டிருப்பதுடன், பல்வேறு குழுக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளையும் டேனி ஷெல்டா்ஸ் வழங்கியிருப்பதாக அதன் நிறுவன இயக்குநா் சிவராமன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.