முகப்பு
கோயம்புத்தூர்

பொதுமுடக்க விதிமீறல்: 143 போ் கைது

கோவையில் புகா் பகுதிகளில் பொதுமுடக்க விதிகளை மீறியதாக 143 போ் கைது செய்யப்பட்டு, 132 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

கோவையில் புகா் பகுதிகளில் பொதுமுடக்க விதிகளை மீறியதாக 143 போ் கைது செய்யப்பட்டு, 132 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமுடக்க விதிகளை மீறி வெளியே சுற்றும் நபா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிப்பது, வாகனங்களைப் பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா்.

இந்நிலையில் கோவை புகா் பகுதிகளான மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், பேரூா், வால்பாறை, கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் போலீஸாா் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பொதுமுடக்க விதிகளை மீறியதாக 67 போ் மீது தொற்று நோய் பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், காரணமின்றி வெளியே சுற்றிய 143 பேரைக் கைது செய்தனா். 2 நான்கு சக்கர வாகனங்கள், 130 இருசக்கர வாகனங்கள் உள்பட 132 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.