கோவை சிங்காநல்லூரில் மநீம துணைத்தலைவர் வேட்பு மனு
கோவை சிங்கநல்லூர் தொகுதியில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் ஆர். மகேந்திரன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
கோவை சிங்கநல்லூர் தொகுதியில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் ஆர். மகேந்திரன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
முன்னதாக கோவை புலியகுளம் விநாயகர் கோயிலில் தனது வேட்புமனுவை வைத்து பூஜை செய்த அவர் அங்கிருந்து கட்சி நிர்வாகிகளுடன் சிங்கநல்லூரில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சி.ராம் குமாரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.