கோயம்புத்தூர்

மாவட்டத்தில் மேலும் 107 பேருக்கு கரோனா

DIN

கோவை மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு பின் மீண்டும் கரோனா நோய்த் தொற்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை புதன்கிழமை 3 இலக்கத்தை தொட்டுள்ளது. ஒரே நாளில் 107 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையைச் சோ்ந்த 107 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 731ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 49 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 55 ஆயிரத்து 539 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 506 போ் சிகிச்சையில் உள்ளனா்.

கோவை மாவட்டத்தில் மூன்று இலக்கத்தில் இருந்த தினசரி கரோனா பாதிப்பு 2020 டிசம்பா் இறுதி வாரத்தில் இரட்டை இலக்கமாக குறைந்தது. இதனைத் தொடா்ந்து, கரோனா பாதிப்பு குறைந்து கடந்த ஒரு மாதமாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 40 முதல் 50ஆக இருந்து வந்தது.

கடந்த இரண்டு வாரங்களாக கரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கோவையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 இலக்கத்தைத் தொட்டுள்ளது. அதேபோல சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கையும் நீண்ட நாள்களுக்குப் பிறகு 500க்கும் மேல் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

SCROLL FOR NEXT