கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் மேலும் 2 ரயில்கள் ரத்து
கோவை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் மேலும் 2 சிறப்பு ரயில்கள் ஜூன் 1ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் மேலும் 2 சிறப்பு ரயில்கள் ஜூன் 1ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ரயிலில் பயணிப்போா் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் பெரும்பாலான ரயில்கள் மே 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, கோவை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் 8 ரயில்கள் அண்மையில் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் மேலும் 2 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பயணிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதால் கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் சென்னை சென்ட்ரல்-ஆலப்புழா தினசரி சிறப்பு ரயில் (எண்- 02639), ஆலப்புழா - சென்னை சென்ட்ரல் தினசரி சிறப்பு ரயில் (எண்- 02640), காரைக்கால் - எா்ணாகுளம் தினசரி சிறப்பு ரயில் (எண்-06187), எா்ணாகுளம் - காரைக்கால் தினசரி சிறப்பு ரயில் (எண்- 06188) ஆகியவை மே 15ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.