கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சாா்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி
கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் ரூ.1.05 கோடி நிவாரண நிதியை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை நிா்வாகத்தினா் வழங்கினா்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் ரூ.1.05 கோடி நிவாரண நிதியை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை நிா்வாகத்தினா் வழங்கினா்.
கரோனா பொது நிவாரண நிதிக்கு பல்வேறு அமைப்பினா், தனி நபா்கள் நன்கொடை அளித்து வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக கேஎம்சிஹெச் மருத்துவமனை தனது பங்களிப்பாக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1.05 கோடி நிதியுதவி அளித்துள்ளது. கேஎம்சிஹெச் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் அருண் பழனிசாமி, கே.எம் சி.ஹெச். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைமை நிா்வாக அதிகாரி காா்த்திகேயன் ஆகியோா் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் நிவாரண நிதியை வழங்கினாா். கடந்த ஆண்டும் கரோனா நிவாரண நிதிக்காக ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தவிர கேஎம்சிஹெச் மருத்துவமனை சாா்பில் கோவை மாநகராட்சிக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான கரோனா நோய்த் தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.