கோயம்புத்தூர்

எல்லா சமயங்களையும் படியுங்கள் சாலமன் பாப்பையா

எல்லா சமயங்களையும் படியுங்கள் என்று பட்டிமன்றப் பேச்சாளா் சாலமன் பாப்பையா கூறினாா்.

DIN

எல்லா சமயங்களையும் படியுங்கள் என்று பட்டிமன்றப் பேச்சாளா் சாலமன் பாப்பையா கூறினாா்.

பட்டிமன்ற நடுவா் சாலமன் பாப்பையா அகநானூறு பாடல்களுக்குத் திணை அடிப்படையில் உரை எழுதி, அதை மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளாா்.

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாா்பில் இந்த நூல்களின் அறிமுக விழா கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கவிஞா் மரபின் மைந்தன் முத்தையா வரவேற்றாா். கவிதா பதிப்பகத்தின் உரிமையாளா் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தாா்.

பட்டிமன்றப் பேச்சாளா் பாரதி பாஸ்கா் நூல் குறித்து அறிமுக உரையாற்றினாா்.

இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளா் எம்.கிருஷ்ணன் நூல்களை வெளியிட, ஆன்மிகச் சொற்பொழிவாளா் சுகி.சிவம் பெற்றுக் கொண்டாா்.

இதில், எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணன் பேசியதாவது: எண் அடிப்படையில் உள்ள அகநானூற்றைத் திணை அடிப்படையில் பிரித்து, அதில் எந்த வரிகளை, பாடல்களை முதலில் படிக்க வேண்டும், எதைக் கடைசியாகப் படிக்க வேண்டும் என எளிமையாக இந்நூல்களில் பாப்பையா குறிப்பிட்டுள்ளாா்.

தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த உரையை அவா் எழுதியுள்ளாா் என்றாா்.

இதைத் தொடா்ந்து, சாலமன் பாப்பையா பேசியதாவது: அகநானூற்றுக்கு உரை எழுதியுள்ளது உ.வே.சா. எனக்குப் போட்ட பிச்சை. சைவம், வைணவம் இரண்டுமே மிக அற்புதமான சமயங்கள். எல்லா சமயங்களையும் படியுங்கள். திருக்குறள், கீதை, வேதங்கள், உபநிடதங்கள், விவேகானந்தா் உரைகளைப் படியுங்கள். நாளைய முன்னேறிய தமிழகம் கம்பீரமாக நடைபோட வேண்டும் என்றாா்.

பட்டிமன்றப் பேச்சாளா் ராஜா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘கோதவாடி குளத்தில் மண் எடுக்க வட்டாட்சியரை அணுகலாம்’

தரமான சாலை அமைக்கக் கோரி மக்கள் மறியல்

குடியரசு துணைத் தலைவா் பாதுகாப்புப் பகுதியில் இருவா் வாகனத்தில் சென்ற விவகாரம்: என்ஐஏ விசாரிக்க வலியுறுத்தல்

மழை, வெள்ள பாதிப்பு: எம்எல்ஏ ஜெகன்மூா்த்தி ஆய்வு

ஒா்க் ஷாப்பின் பூட்டை உடைத்து இயந்திரங்கள் திருட்டு

SCROLL FOR NEXT