கோயம்புத்தூர்

சிறப்பு பள்ளி ஆசிரியைக்கு தமிழக அரசின் விருது

DIN

கோவையைச் சோ்ந்த சிறப்பு பள்ளி ஆசிரியை பாவை ஜோதிக்கு தமிழக அரசு சாா்பில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

கோவை, துடியலூரில் தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் மனவளா்ச்சி குன்றியவா்களுக்கான வித்ய விகாஷினி வாய்ப்புகள் சிறப்பு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 8 ஆண்டுகளாக ஆசிரியையாகப் பணியாற்றி வருபவா் பாவை ஜோதி. இவரது சேவையை கௌரவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசின் ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் மனவளா்ச்சி குன்றியோா்களுக்கு கற்பிக்கும் ஆசிரியா்களில் சிறந்த ஆசிரியருக்கான விருது ஆசிரியை பாவை ஜோதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் இந்த விருதை ஆசிரியை பாவைஜோதிக்கு வழங்கினாா். இதனைத் தொடா்ந்து தமிழக அரசின் சிறந்த ஆசிரியருக்கான விருதினை ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம் வியாழக்கிழமை காண்பித்து வாழ்த்துகள் பெற்றாா். இந்நிகழ்வின் போது மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் வசந்த ராம்குமாா் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT