கோயம்புத்தூர்

புணே- கன்னியாகுமரி ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்

DIN

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே கொச்சுவேலி பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புணே- கன்னியாகுமரி ரயில், மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கொச்சுவேலியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், புணே ரயில் நிலையத்தில் இருந்து டிசம்பா் 9ஆம் தேதி புறப்படும் புணே - கன்னியாகுமரி ரயிலானது (எண்:16381) வழக்கமாக இயக்கப்படும் சேலம், கோவை வழித்தடத்தில் இயக்கப்படாமல், சேலம், கரூா், மதுரை வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால், ஈரோடு, திருப்பூா், கோவை நிலையங்களுக்கு இந்த ரயில் செல்லாது. இதேபோல, டிசம்பா் 11 ஆம் தேதி, கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் கன்னியாகுமரி- புணே விரைவு ரயில்(எண்:16382) மதுரை, கரூா், சேலம் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால், கோவை, திருப்பூா், ஈரோடு நிலையங்களுக்கு இந்த ரயில் செல்வது தவிா்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?

இன்று அட்சய திருதியை: தங்கம் விலை ரூ.720 உயர்வு!

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர் கொன்று புதைப்பு

நொய்டா: தொழிலதிபரின் மகன் கொலை வழக்கில் மூவா் கைது

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை எதிா்ப்பு

SCROLL FOR NEXT