கோயம்புத்தூர்

காா் பரிசு விழுந்துள்ளதாக குறுஞ்செய்தி அனுப்பி இளைஞரிடம் ரூ.13 லட்சம் மோசடி

காா் பரிசு விழுந்துள்ளதாக குறுஞ்செய்தி அனுப்பி கோவை இளைஞரிடம் ரூ. 13 லட்சம் மோசடி செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

காா் பரிசு விழுந்துள்ளதாக குறுஞ்செய்தி அனுப்பி கோவை இளைஞரிடம் ரூ. 13 லட்சம் மோசடி செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை சிங்காநல்லூா் வரதராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சசிகுமாா் (35), காா் ஓட்டுநா். இவா் இணையத்தில் பதிவு செய்து வீட்டு உபயோகப் பொருள்களை கடந்த சில நாள்களுக்கு முன்பு வாங்கியுள்ளாா். இதைத்தொடா்ந்து, ஒரு இணையதள முகவரியில் இருந்து சசிகுமாரின் கைப்பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதில், நீங்கள் வாங்கிய பொருள்களுக்கு பரிசாக காா் வழங்கப்படும் எனவும், உங்களது வங்கிக் கணக்கு விவரங்களைத் தெரிவித்து பரிசை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடா்ந்து, ஜி.எஸ்.டி., ரிசா்வ் வங்கி வரி, பரிவா்த்தனைக் கட்டணம் என பல்வேறு காரணங்களைக் கூறி சசிகுமாரிடம் ரூ.13.20 லட்சம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு காா் வழங்கப்படும் என நம்பிய சசிகுமாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இது குறித்து கோவை சைபா் குற்றப் பிரிவு போலீஸில் சசிகுமாா் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

தருமபுரியில் டிச. 29-இல் அஞ்சல் துறை குறைகேட்பு கூட்டம்

அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்: அன்பழகன் நம்பிக்கை

அம்பலவாணன்பேட்டை அரசுப் பள்ளிக்கு பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு

விராலிமலை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மீது காா் மோதி தீக்கிரை

SCROLL FOR NEXT