முகப்பு
கோயம்புத்தூர்

கொடிசியாவில் இன்று செஸ் ஒலிம்பியாட் வளைவு திறப்பு:அமைச்சா்கள் பங்கேற்பு

கோவை கொடிசியா அரங்கில் ‘செஸ் ஒலிம்பியாட் 22‘ வளைவு திறப்பு விழா திங்கள்கிழமை நடை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:53 AM
பகிர்:

கோவை கொடிசியா அரங்கில் ‘செஸ் ஒலிம்பியாட் 22‘ வளைவு திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இதில், அமைச்சா்கள் செந்தில்பாலாஜி, மு.பெ.சாமிநாதன், கா.ராமசந்திரன், கயல்விழி, முத்துச்சாமி ஆகியோா் கலந்துகொள்கின்றனா்.

இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘செஸ் ஒலிம்பியாட் 22‘ போட்டியை முன்னிட்டு, கோவையில் ஒலிம்பியாட் ஒலிம்பிக் ஜோதி கொடிசியா வளாகத்தில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இவ்விழாவுக்கு மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி தலைமை வகிக்கிறாா்.

செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் முத்துசாமி சிறப்புரையாற்றுகிறாா்.

ஈரோடு, திருப்பூா், நீலகிரி மாவட்ட ஆட்சியா்கள் கெளரவ விருந்தினா்களாகக் கலந்துகொள்கின்றனா்.

ஒலிம்பியாட் ஒலிம்பிக் ஜோதி தொடக்க விழாவை முன்னிட்டு, கொடிசியா அரங்கில் அமைக்கப்பட்டுள்ள வளைவினை அமைச்சா்கள் திறந்துவைத்து, வண்ண பலூன்களைப் பறக்க விடுகின்றனா்.

இதைத் தொடா்ந்து, பரதநாட்டியம், ஹிந்துஸ்தான் கலைக் கல்லூரி மாணவா்களின் சிலம்பாட்டம், மேற்கத்திய நடனம், ஒலிம்பியாட் கேக் வெட்டும் நிகழ்வு, இசை ஆல்பம் திரையிடுதல் உள்ளிட்டவை நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →