கோயம்புத்தூர்

கோவை: வெள்ளியங்கிரி மலை சாலையில் காரை வழிமறித்த காட்டு யானைகள்;  வைரல் விடியோ

கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலை சாலையில் காரை வழிமறித்த காட்டு யானைகள் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

DIN

கோவை: கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலை சாலையில் காரை வழிமறித்த காட்டு யானைகள் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோடைகாலம் என்பதால் வனப் பகுதிகளுக்குள் உள்ள காட்டு விலங்குகள் வன எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு உலா வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் வன எல்லைகளை கடந்து மற்றொரு பகுதிகளுக்கு செல்லும் காட்டு யானைகள் தற்போது பகல் நேரங்களிலும் உலா வருகிறது. 

இதனால் கோவை வெள்ளியங்கிரி மலை உள்ளிட்ட பகுதிகளுக்கும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளும் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று  மாலை கோவை பூண்டி சாலையில் வெள்ளிங்கிரி மலைக்குச் செல்ல பக்தர்கள் காரில் சென்றுள்ளனர். அப்போது முதல் வளைவில் காட்டு யானைகள் சத்தம் கேட்டதால் உடனடியாக காரை ஓட்டி வந்தவர் வாகனத்தை நிறுத்தி உள்ளார். 

அப்போது திடீரென அந்த சாலையில் 2 ஆண் யானைகள் வந்து நின்றது. நீண்ட நேரமாக அதே பகுதியில் நின்ற யானைகள், பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் நுழைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போளுவாம்பட்டி வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். 

மேலும் யானை ஊருக்குள் வராமல் இருக்க பட்டாசுகளை வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். பூண்டி சாலையில் இரண்டு காட்டு யானைகள் கம்பீரமாக நிற்கும் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ள பாதிப்புக்கு ஒரு வாரத்தில் இழப்பீடு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உத்தரவு

கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் நிறைவு: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா்

அன்புமணிக்கு மாம்பழம் சின்னம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

SCROLL FOR NEXT