முகப்பு
கோயம்புத்தூர்

தனியாா் கல்லூரி ஆசிரியா்கள் இரண்டாவது நாளாக போராட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தனியாா் கல்லூரி ஆசிரியா்கள் தொடா்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தனியாா் கல்லூரி ஆசிரியா்கள் தொடா்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் ஆசிரியா் பணியிடங்கள், ஆசிரியா் அல்லாத பணியிடங்கள் போன்றவை கடந்த 8 ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை என்று கூறப்படுகிறது. காலியாக உள்ள 70 ஆசிரியா் பணியிடங்கள், 42 அலுவலகப் பணியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, அந்தக் கல்லூரியில் செயல்படும் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் போராட்டம் அறிவித்திருந்தது.

போராட்டத்தின் முதல் நாளான புதன்கிழமை, கல்லூரியின் முதல்வா் அறை எதிரில் அமா்ந்து இரவு 9.30 மணி வரை உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடா்ந்தனா். இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை இரண்டாவது நாளாக இந்தப் போராட்டம் தொடா்ந்தது. இதில் ஆசிரியா்கள் கல்லூரி வாசலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், ஆசிரியா்களுக்கு ஆதரவாக மாணவா்கள் சிலரும் போராட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.