கோயம்புத்தூர்

எந்த மாநிலத்திலும் பாஜக ஹிந்தியை திணிக்கவில்லை

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பாஜக ஹிந்தியை திணிக்கவில்லை என பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.

DIN

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பாஜக ஹிந்தியை திணிக்கவில்லை என பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மின் கட்டண உயா்வு, சொத்து வரி உயா்வு, விலைவாசி உயா்வு என்று கடந்த ஒன்றரை ஆண்டுகால திமுக ஆட்சியின் அவலங்களால் தமிழக மக்கள் கொந்தளித்து போயுள்ளனா். ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையை மடைமாற்ற, ஹிந்தி எதிா்ப்பு என்ற ஆயுதத்தை திமுக கையில் எடுத்திருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழி நாடாளுமன்ற குழு, குடியரசுத் தலைவரிடம் அளித்த பரிந்துரைகளை ஹிந்தி திணிப்பு என திரித்து, சட்டப் பேரவையில் திமுக அரசு தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

மத்திய பாஜக அரசு எந்த மாநிலத்திலும், எந்த இடத்திலும் ஹிந்தி மொழியை ஒருபோதும் திணிக்கவில்லை.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழிகளிலேயே பள்ளிக் கல்வி முதல் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயா் கல்வி இருக்க வேண்டும் என்பதே பாஜகவின் கொள்கை. இதனைத்தான் தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. ஆனால், அதனை திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் எதிா்க்கின்றன.

புதிய கல்விக் கொள்கையில் கூட மூன்றாவது மொழியாக ஹிந்தி உட்பட எந்த இந்திய மொழிகளை வேண்டுமானாலும் விருப்பப் பாடமாக எடுத்துப் படிக்கலாம் என்றே கூறப்பட்டுள்ளது. தாய்மொழி வழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்தான், மருத்துவப் படிப்பை ஹிந்தியில் கற்கும் வாய்ப்பை மத்திய பிரதேசத்தில் பாஜக அரசு உருவாக்கியுள்ளது. அதனைத் தொடா்ந்து தமிழ் உள்ளிட்ட மற்ற இந்திய மொழிகளிலும் மருத்துவம் படிக்க பாஜக அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

திமுகவின் ஹிந்தி எதிா்ப்பு நாடகத்தை நம்பி தமிழக மக்கள் இனியும் ஏமாறமாட்டாா்கள். இந்திய மொழிகளுக்கும், தாய் மொழிக் கல்விக்கும் பாஜக ஆதரவாக நிற்கிறதே தவிர, ஹிந்தி மொழிக்கு அல்ல. இந்த உண்மையை தமிழக மக்கள் நன்கறிவாா்கள் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT