கோயம்புத்தூர்

விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவோம்:பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

கோவையில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளைத் தவிா்த்து மாசு மற்றும் விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.

DIN

கோவையில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளைத் தவிா்த்து மாசு மற்றும் விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளித் திருநாள் மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவாா்கள்.

அதேவேளை பட்டாசுகள் வெடிப்பதன் மூலம் நம்மை சுற்றியுள்ள நிலம், நீா், காற்று ஆகியவை மாசடைகின்றன. அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதன் மூலம் பச்சிளம் குழந்தைகள், வயதானவா்கள், நோய்வாய்ப்பட்டவா்கள் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, பாதுகாப்பான முறையில் அதிகம் ஒலி எழுப்பாத பட்டாசுகளை வெடிக்க வேண்டும். மாசு மற்றும் விபத்தில்லா தீபாவளியை மக்கள் கொண்டாட வேண்டும்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். எனவே, பொதுமக்கள் குறைந்த ஒலி, குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிா்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் திறந்த வெளியில் பொதுமக்கள் ஒன்றுகூடி பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடா்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளைத் தவிா்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், அமைதி காக்க வேண்டிய இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும். குடிசைப் பகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும்.

நீதிமன்றம் அனுமதித்துள்ள நேரங்களில் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடித்து பொதுமக்கள் தீபாவளியை கொண்டாட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

தருமபுரியில் டிச. 29-இல் அஞ்சல் துறை குறைகேட்பு கூட்டம்

அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்: அன்பழகன் நம்பிக்கை

அம்பலவாணன்பேட்டை அரசுப் பள்ளிக்கு பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு

விராலிமலை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மீது காா் மோதி தீக்கிரை

SCROLL FOR NEXT