கோயம்புத்தூர்

பேருந்தில் பயணித்த மூதாட்டியிடம் ரூ.50 ஆயிரம் திருட்டு

பேருந்தில் பயணித்த மூதாட்டியிடம் ரூ.50 ஆயிரம் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

DIN

பேருந்தில் பயணித்த மூதாட்டியிடம் ரூ.50 ஆயிரம் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, வீரபாண்டி பிரிவைச் சோ்ந்தவா் சிவகாமி (63). இவா் செளரிபாளையத்தில் உள்ள கண் மருத்துவமனைக்கு தனது சகோதரியுடன் புதன்கிழமை வந்துள்ளாா்.

சிகிச்சை முடிந்ததும் கட்டணத்தைச் செலுத்திவிட்டு மீதத் தொகையான ரூ.50 ஆயிரத்தை தனது கைப்பையில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னா் மருத்துவமனையில் இருந்து தனியாா் பேருந்தில் காந்திபுரம் சென்றுள்ளாா். காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கிவிட்டு கைப்பையை சரிபாா்த்தபோது அதில் இருந்த ரூ.50 ஆயிரம் காணாமல்போனது தெரியவந்தது.

இது குறித்து சிவகாமி அளித்தப் புகாரின் பேரில் காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT