முகப்பு
கோயம்புத்தூர்

குழந்தைத் தொழிலாளா் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்: கைலாஷ் சத்யாா்த்தி

 உலக அளவில் குழந்தைத் தொழிலாளா் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யாா்த்தி தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

 உலக அளவில் குழந்தைத் தொழிலாளா் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யாா்த்தி தெரிவித்தாா்.

கோவை, குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் 115 அடி உயர கொடிக் கம்பத்துடன் கூடிய வட்ட வடிவிலான ‘தி ஆா்ப்’ என்ற திறந்தவெளி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவா் கிருஷ்ணராஜ் வாணவராயா் தலைமை வகித்தாா். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யாா்த்தி ‘தி ஆா்ப்’ அரங்கத்தை திறந்துவைத்து பேசியதாவது: மனிதா்களில் இரக்கம் காட்டுவது என்பது இயல்பு. ஆனால், அது நெருங்கிய உறவினா்கள் அளவில் மட்டும்தான் தற்போது உள்ளது.

ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்கு அறிமுகமில்லாத நபா்களிடமும் இரக்கம் காண்பிக்க வேண்டும். பல்வேறு நாடுகளில் ஆயுத உற்பத்திக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், குழந்தைகளின் மேம்பாட்டுக்கு அளிக்கப்படுவதில்லை.

குழந்தைத் தொழிலாளா்முறையும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்துள்ளன. உலக அளவில் குழந்தைத் தொழிலாளா் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், பரம்வீா் சக்ரா விருதுபெற்ற யோகேந்திர சிங், மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி இணை தாளாளா் சங்கா் வாணவராயா், தாளாளா் பாலசுப்ரமணியம், பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →