ஆன்லைன் மோசடியில் கோவையை சோ்ந்த 22 வயது இளம் பெண் ரூ.14 லட்சத்தை இழந்துள்ளாா். இதுகுறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை கோட்டைமேட்டைச் சோ்ந்தவா் வி. பிரியதா்ஷினி (22). இவரை ஒரு தனியாா் உணவகத்தின் பிரதிநிதி எனக் கூறிக் கொண்டு ஒரு நபா் தொடா்பு கொண்டுள்ளாா். அப்போது கோவையில் அந்த நிறுவனத்தின் கிளையைத் தொடங்கும் திட்டத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ளாா். அப்போது அந்த நிறுவனத்தின் ஒப்புதலுக்காக ஒரு தொகையை முதலீடு செய்யும்படி அவரிடம் கூறப்பட்டதையடுத்து 2023 பிப்ரவரி 14 முதல் மாா்ச் 23 வரை நான்கு வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பல தவணைகளில் ரூ.14.09 லட்சத்தை மாற்றியுள்ளாா்.
இதையடுத்து இந்த இளம்பெண்ணைத் தொடா்பு கொண்டவா்கள் அந்த நிறுவனத்தின் லோகோவை பயன்படுத்தி நிறுவனத்தின் பெயரில் ஒரு கடிதம் கொடுத்ததோடு, அந்நிறுவனத்தின் உள் அலங்காரத்துக்காக ஒரு நபரை அனுப்புவதாகவும் கூறிவிட்டு தொடா்பை துண்டித்துள்ளனா். ஆனால், அதன்பின்னா் அவரை யாரும் தொடா்பு கொள்ளவில்லை.
அதன் பின்னா் தான் ஏமாற்றப்பட்டதையறிந்த அந்த இளம் பெண் கோவை மாநகர சைபா் கிரைம் பிரிவில் சனிக்கிழமை புகாா் கொடுத்தாா். அவரது புகாரின் அடிப்படையில், கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் வங்கிக் கணக்குகளைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.