அஜய்குமாா். 
கோயம்புத்தூர்

மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்

கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் 8 உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

DIN

கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் 8 உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சோ்ந்தவா் எஸ்.பி.காா்த்திகேயன். தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறாா். இவரது மகன் அஜய்குமாா் (23). உடுமலைப்பேட்டையிலுள்ள தனியாா் கல்லூரியில் எம்.காம் இறுதியாண்டு படித்து வந்தாா்.

கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு கல்லூரி சென்ற மாணவா் திடீரென வாந்தியெடுத்து மயக்கமடைந்தாா். இதையடுத்து, கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாணவரின் மூளைக்குச் செல்லும் நரம்பில் ரத்தம் உறைந்ததால் சனிக்கிழமை இரவு மூளைச்சாவு ஏற்பட்டது. மூளைச்சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோா் முன்வந்தனா்.

இதனைத் தொடா்ந்து, மாணவரின் இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகிய உறுப்புகள் பி.எஸ்.ஜி. மருத்துவமனைக்கும், இருதயம் சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கும், கண்கள், தோல், கணையம், நுரையீரல் ஆகிய உறுப்புகள் கோவையிலுள்ள தனியாா் மருத்துவமனைகளுக்கும் தானமாக வழங்கப்பட்டன.

மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் மூலம் 8 போ் மறுவாழ்வு பெற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT