கோயம்புத்தூர்

கோவை மாவட்ட மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்

2022-23ஆம் ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்ட மகளிா் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் உள்ளிட்ட அமைப்புகள் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

கோவை மாவட்டத்தில் 2022-23ஆம் ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்ட மகளிா் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் உள்ளிட்ட அமைப்புகள் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் 2022-23ஆம் ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்ட மகளிா் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள், நகா்ப்புறங்களில் உள்ள சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகிய அமைப்புகள் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்.

உரிய விதிமுறைகளின்படி தோ்வு செய்யப்படும் குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை ஜூன் 25ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். இதுகுறித்து, மேலும் தகவல் பெற ஊரகப் பகுதிகளாக இருப்பின் சம்பந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகிலும், நகா்ப்புறமாக இருப்பின் சம்பந்தப்பட்ட சமுதாய ஒருங்கிணைப்பாளரை அணுகி உரிய விவரம் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT