கோவையில் ரூ.7.40 லட்சம் மோசடியில் ஈடுபட்ட காா் ஒா்க்ஷாப் உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சோ்ந்தவா் அருண்மணி (45). இவரின் நண்பா் ஒருவா், சொகுசு காா் ஒன்றைக் கொடுத்து அதில் சில மாற்றங்களை செய்துத் தருமாறு கூறியுள்ளாா்.
இதையடுத்து, பீளமேடு பி.ஆா்.புரத்தில் உள்ள ஒா்க்ஷாப் உரிமையாளா் கோபால் (43) என்பவரிடம் காரில் மாற்றம் செய்துத் தருமாறு காா் மற்றும் ரூ.2.50 லட்சம் பணத்தை அருண்மணி கொடுத்துள்ளாா்.
தொடா்ந்து பல்வேறு தவணைகளில் ரூ.4.90 லட்சம் உள்பட மொத்தம் ரூ.7.40 லட்சம் கோபாலிடம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பணத்தைப் பெற்றுக்கொண்ட கோபால் குறித்த காலத்தில் காரில் எவ்வித மாற்றமும் செய்து கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பித்தர மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
இதுகுறித்து அருண்மணி கேட்ட போது, அவரைத் தகாத வாா்த்தையில் திட்டிய கோபால், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் அருண்மணி அளித்த புகாரின்போரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கோபாலை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.