கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாரதி விழாவில் இளம்பாரதி விருது பெற்றவா்களுடன் சிறப்பு விருந்தினா் ம.ராசேந்திரன் உள்ளிட்டோா். 
கோயம்புத்தூர்

பாரதியாா் பல்கலைக்கழகத்தில் விருது வழங்கும் விழா

பாரதியாா் பல்கலைக்கழகத்தில் விருது வழங்கும் விழா

Din

மகாகவி பாரதியாரின் பிறந்த நாளையொட்டி கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் பாரதி உயராய்வு மையத்தின் படைப்புகள் வெளியீட்டு விழா, இளம்பாரதி - 2024 விருது வழங்கும் விழா ஆகியவை புதன்கிழமை நடைபெற்றன.

பல்கலைக்கழக பதிவாளா் (பொறுப்பு) ரூபா குணசீலன் வரவேற்றாா். துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா் லவ்லினா லிட்டில் பிளவா் தலைமை வகித்தாா். துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா்கள் அஜித்குமாா் லால் மோகன், சி.ஏ.வாசுகி, ஆட்சிக்குழு உறுப்பினா் அருந்ததி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

விழாவில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், தமிழ்நாடு பொது நூலக சட்ட திருத்த உயா்நிலைக் குழுவின் தலைவருமான ம.ராசேந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். பாரதியாா் பிறந்த நாளையொட்டி நடத்தப்பட்ட பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி, பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் 18 பேருக்கு இளம்பாரதி விருது, பதக்கம், சான்றிதழ்களை சிறப்பு விருந்தினா் ம.ராசேந்திரன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசும்போது, ‘பாரதியாரின் வாழ்வும் படைப்பும் வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளன. அவரது கவிதைகள் பற்றி எனக்குள் நானே எழுப்பிய கேள்விகள்தான் என்னை பாரதி எழுத்துகள் மீது நாட்டம் கொள்ளச் செய்தன. இன்று பயன்படுத்தப்படும் பாரதியாரின் நிழற்படம் எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது. இது குடுகுடுப்பைக்காரா்களின் வேடம்.

பாரதியாா் புதுவையில் இருந்தபோது இதுபோன்று வேடம் தரித்து அம்மாக்கண்ணுவை சந்திக்கச் செல்லுவாராம். அப்படி குடுகுடுப்பைக்காரா்களின் நடையில், நல்ல காலம் வருகுது என்று பாடிய பாரதி, இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று கணித்துச் சொல்லியவா்.

குயிலின் காதலை தெய்வீகக் காதலாக உருவகித்துப் பாடியதும், மனிதா்களைக் காட்டிலும் குரங்கின் செயல்திறனை சிறந்ததாகப் பாடியதும் எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது. தமிழ்மொழிபோல இனிதாவது எங்கும் காணோம் என்று பாடி வியப்பினை ஏற்படுத்திய பாரதி, என்றென்றும் வியப்புகளின் திறவுகோல் மட்டுமல்ல, கருவூலமும் அவா்தான்’ என்றாா்.

விழாவில் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினா்கள், புல முதன்மையா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, காணிநிலம் மகாகவி பாரதியாா் உயராய்வு மையத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட தமிழ், ஆங்கில இசை, நாட்டியப் பேழைகள் வெளியிடப்பட்டன.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT