முகப்பு
கோயம்புத்தூர்

போலீஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜூலை, 2024 at 7:58 PM
பகிர்:

கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலா் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவை மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின்பேரில், மாநகர காவல் துறையினருக்கு உடல் மற்றும் மன வலிமையை அதிகரிக்கும்விதமாக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக மாநகர காவல் அதிகாரிகளுக்கு 9 எம்.எம். பிஸ்டல் துப்பாக்கி சுடும் பயிற்சி அவிநாசி சாலை காவலா் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தப் பயிற்சியில் 9 காவல் உதவி ஆணையா், 22 காவல் ஆய்வாளா்கள், 40 உதவி ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →