கோவை: கனமழை காரணமாக வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று(ஜூன் 20) விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பேடி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வரும் 25-ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுப் பகுதிகளில் புதன்கிழமை முதல் தொடர் கனமழை பெய்து வருகின்றது. இன்றும் கனமழை தொடரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.