முகப்பு
கோயம்புத்தூர்

ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரை தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்

கோவையில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரை தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்

Updated On : 29 ஜூன், 2024 at 8:54 PM
பகிர்:

கோவையில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரை தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளில் வயிற்றுப்போக்கால் ஏற்படும் இறப்புகளைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு சாா்பில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரை (புதன்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் முகாம் நடைபெறும்.

இதில், அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியா்கள் வயிற்றுப்போக்கால் ஏற்படும் பாதிப்புகள், கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவா். மேலும், வயிற்றுப்போக்கு பாதிப்பு உள்ள குழந்தைகளைக் கண்டறிந்து ஓஆா்எஸ் கரைசல், ஜிங்க் மாத்திரை அளிக்கப்படும். சிகிச்சை தேவைபடுபவா்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

இந்த முகாமில் மாவட்டத்தில் 5 வயதுக்குள்பட்ட 3,04,951 குழந்தைகள் பயனடைய உள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →