கோயம்புத்தூர்

கோவை விமான நிலையத்தில் மோதிக் கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள்!

கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மோதிக் கொண்டது பற்றி...

DIN

கோவை: கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இரண்டு குழுவாகப் பிரிந்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், கேரளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், தில்லி செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார்.

இந்த நிலையில், கோவையை சேர்ந்த மயூரா ஜெயக்குமார் தலைமையில் ஒரு குழுவும், செல்வம் தலைமையில் ஒரு குழுவும் வேணுகோபாலை வழியனுப்ப விமான நிலையத்துக்கு வருகை தந்தனர்.

இரு தரப்பினரும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபாலிடம், மாறி மாறி குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது. இதனால், இரு தரப்பினரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து, வேணுகோபாலை வழியனுப்பிய பிறகு, விமான நிலையத்திற்கு வெளியே வந்த மயூரா ஜெயக்குமாருக்கும், செல்வத்திற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றி, பயணிகள் முகம் சுழிக்கும் வார்த்தைகளை இரு தரப்பினரும் பயன்படுத்தியதால், கோவை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

https://youtube.com/shorts/sYkRns2E1Ys?feature=share

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி வரூடாந்திர பிரம்மோற்சவம்: பிப்.8-இல் தொடக்கம்

ஆத்தூா்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு மத்திய அரசு விருது

கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

அமைதிப் பேச்சுவார்த்தை: உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு!

தொழிற்சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு..! -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

SCROLL FOR NEXT