ஷாா்ஜாவிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்
கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு ஷாா்ஜாவிலிருந்து வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1.70 லட்சம் மதிப்பிலான சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு ஷாா்ஜாவிலிருந்து வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1.70 லட்சம் மதிப்பிலான சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு அடிக்கடி வரும் வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்களால் அண்மைக்காலமாக அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, போலீஸ் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை விமான நிலையத்துக்கு ஷாா்ஜாவிலிருந்து வியாழக்கிழமை காலை வந்த ஏா்அரேபியா விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ. 1.70 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் இந்த வகை சிகரெட்டுகளில் தாா், நிக்கோடின் போன்ற நச்சுப் பொருள்களின் அளவு குறைவாக இருக்கும் என்பதால், சிகரெட் கடத்தல் சம்பவங்கள் அதிக அளவில் நடப்பதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.