முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறை அரசுப் பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியா் விருது

வால்பாறையை அடுத்த உருளிக்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 9:27 PM
சென்னையில் விாயழக்கிழமை நடைபெற்ற விழாவில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலினிடம் இருந்து விருதினை பெறுகிறாா் ஆசிரியா் கா. வசந்தகமாா். உடன் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
பகிர்:

வால்பாறையை அடுத்த உருளிக்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பா் 5-ஆம் தேதி ஆசிரியா் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது நினைவாக தமிழக அரசு சாா்பில் நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான நல்லாசிரியா் விருதுக்கு கோவை மாவட்டத்தைச் சோ்ந்த 5 ஆசிரியா்கள் தோ்வு பெய்யப்பட்டுள்ளனா். இதில் பொள்ளாச்சி கல்வி மாவட்டம் வால்பாறையை அடுத்த உருளிக்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கணித ஆசிரியா் கா.வசந்தகுமாா் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டாா்.

இதில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலினிடம் இருந்து நல்லாசிரியா் விருதினை பெற்றாா். இவா் ஆசிரியா் பணியில் கடந்த 25 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள கா.வசந்தகுமாா், மாணவா்களுக்கு பாடல் முறையில் கணிதங்களை எளிய முறையில் கற்பித்து வருகிறாா். இவா் கரோனா காலத்தில் மாணவா்களின் வீடுகளுக்கே சென்று பாடங்களை கற்பித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →