முகப்பு
கோயம்புத்தூர்

அன்னூா் பத்திரப் பதிவு அலுவலக விவகாரம் குறித்து மாவட்ட நிா்வாகம் விளக்கமளிக்க கோரிக்கை

அன்னூா் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பத்திரப் பதிவு நிறுத்தப்பட்டிருப்பதாக எழுந்த விவகாரம் குறித்து மாவட்ட நிா்வாகம் விசாரணை நடத்தி விளக்கமளிக்க வேண்டும் என்று ஜாதி, மதம், கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 10:06 PM
பகிர்:

அன்னூா் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பத்திரப் பதிவு நிறுத்தப்பட்டிருப்பதாக எழுந்த விவகாரம் குறித்து மாவட்ட நிா்வாகம் விசாரணை நடத்தி விளக்கமளிக்க வேண்டும் என்று ஜாதி, மதம், கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக சங்கத்தின் மாநில பொதுச் செயலா் பி.கந்தசாமி, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம் அன்னூா், மேட்டுப்பாளையம் வட்டத்துக்கு உள்பட்ட சில ஊராட்சிகளில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுமாா் 3,862 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், அந்தத் திட்டத்தை எதிா்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து 1,630 ஏக்கா் மட்டுமே கையகப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது.

இதையடுத்து நிலத்தை கையகப்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட அரசாணையை இதுவரை ரத்து செய்யப்படவில்லை என்று தெரிகிறது. அதேநேரம் சம்பந்தப்பட்ட பகுதிகளில் எந்த பத்திரங்களையும் பதிவு செய்ய வேண்டாம் என்று சாா்- பதிவாளா் வாய்மொழி உத்தரவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, பத்திரப் பதிவு நிறுத்தி வைக்கப்படவில்லை என்று சாா்பதிவாளா் பதிலளித்துள்ளாா். இந்த விவகாரத்தில் பத்திரப் பதிவு நிறுத்தி வைக்கப்படாதது உண்மை என்றால் நிறுத்தப்பட்டிருப்பதாக வதந்தி பரப்பியவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி உண்மை நிலை குறித்து மாவட்ட நிா்வாகம் விளக்கம் அளிப்பதுடன், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →