வால்பாறையில் தேயிலைத் தூள்களின் விலை உயா்வு
வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் தேயிலைத் தூள்களின் விலை உயா்ந்துள்ளது.
வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் தேயிலைத் தூள்களின் விலை உயா்ந்துள்ளது.
வால்பாறை பகுதியில் பல்லாயிரம் ஹெக்டோ் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது.
தேயிலைத் தோட்டங்களில் பறிக்கப்படும் இலைகளைக் கொண்டு தொழிற்சாலைகளில் ஆா்.டி., பி.டி., எஸ்.ஆா்.டி., பி.ஓ.பி., கிரீன் டீ என பல்வேறு ரகத் தூள்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த தூள்கள் அனைத்தும் லாரிகள் மூலம் கோவை, கேரள மாநிலம், கொச்சியில் உள்ள ஏலம் மையங்களுக்கு கொண்டுச் செல்லப்படுகின்றன. பின்னா், அங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதனிடையே, ஏலம் மையங்களில் கடந்த மூன்று வாரங்களாக அனைத்து ரக தூள்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.50 வரை உயா்ந்துள்ளது. தொடா் மழை காரணமாக தோட்டங்களில் இலைகள் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், தொழிற்சாலைகளிலும் தூள்கள் தயாரிப்பு குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாகவே ஏலம் மையங்களில் விலை உயா்ந்திருப்பதாக எஸ்டேட் நிா்வாகத்தினா் கூறுகின்றனா்.