முகப்பு
கோயம்புத்தூர்

மகளைத் திட்டிய கட்டடப் பணியாளரைக் கொன்ற தந்தை கைது!

சூலூரில் மகளைத் திட்டியவரைக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டிருப்பது பற்றி...

Updated On : 14 ஏப்ரல், 2025 at 4:52 AM
கைதான மணிகண்டன்
பகிர்:

சூலூர்: சூலூர் அருகே பாப்பம்பட்டியில் மகளைத் திட்டிய கட்டடப் பணியாளரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்காசியில் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருபவர் மணிகண்டன். இவரது மனைவி பாப்பம்பட்டியில் மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், குழந்தைகளைக் காண்பதற்காக இரண்டு நாள்களுக்கு முன்னதாக பாப்பம்பட்டிக்கு மணிகண்டன் வந்துள்ளார்.

இந்த நிலையில், மணிகண்டன் அவரது மனைவியின் வீட்டின் முன்பாக கேம்ப் ஃபையர் என்ற பெயரில் தீயை மூட்டியுள்ளார். இதற்காக அருகிலிருந்த கட்டடத்தில் இருந்த மரக்கட்டைகளை எடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை பாப்பம்பட்டியைச் சேர்ந்த கட்டடப் பணியாளர் சிக்கந்தர் என்கிற ஆறுமுகம் (34) தட்டிக் கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கட்டடத்தின் மரக்கட்டைகளை எடுத்த மணிகண்டனின் மகளை ஆறுமுகம் திட்டியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த மணிகண்டன், கிரிக்கெட் மட்டையால் ஆறுமுகத்தை தாக்கியுள்ளார்.

மேலும், ஆறுமுகத்தை 100 மீட்டர் இழுத்துச் சென்று பாப்பம்பட்டி செலகரைசல் சாலையில் போட்டு அங்கேயும் கிரிக்கெட் மட்டையால் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் பலியானார்.

தகவலறிந்த சூலூர் காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து ஆறுமுகத்தின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஈ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, தலைமறைவான மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →