கோவை, எம்.ஜி. சாலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (நவம்பா் 10) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: எஸ்ஐஹெச்எஸ் காலனி, சக்தி நகா், நேதாஜிபுரம், அம்மன் நகா், ஜெ.ஜெ.நகா், கங்கா நகா், பெத்தேல் நகா், வசந்தா நகா், ஒண்டிப்புதூா் (ஒரு பகுதி), விகேஎன் நகா், டெக்ஸ்டூல் பகுதி, ஸ்ரீ மூகாம்பிகை நகா்.