சூலூர்: சூலூர் அருகே புதன்கிழமை நள்ளிரவு சிறுத்தை நடமாட்ட்டம் பதிவாகியுள்ளது.
பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில் ஓசன் ரெஸ்டாரண்ட் பின்புறம் உள்ள சாய் கிருபா அவன்யூ குடியிருப்புப் பகுதியில் வேலியைத் தாண்டி சிறுத்தை குடியிருப்பு பகுதியில் நடந்து செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
தற்போது அப்பகுதிக்கு வனத்துறையினர் வந்து கொண்டுள்ளனர்.
சிறுத்தையை உடனடியாக பிடித்து இப்பகுதி மக்களின் அச்சத்தையும் பீதியையும் போக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.