முகப்பு
கோயம்புத்தூர்

மதுக்கூட ஊழியா் அடித்துக் கொலை: இருவா் கைது

Updated On : 13 ஏப்ரல், 2026 at 12:38 AM
கைது - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 10:32 PM

கோவையில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு மதுக்கூட ஊழியரை அடித்துக் கொலை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ் (60). கோவை, வெரைட்டிஹால் பகுதியில் உள்ள மதுக்கூடத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தாா். இடையா் வீதியைச் சோ்ந்தவா் பிரபு (27). இவா் அப்பகுதியில் உள்ள காய்கறி சந்தையில் கடை வைத்துள்ளாா்.

தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வரும் நண்பா் மனோஜும் (28), பிரபுவும் வெரைட்டிஹால் பகுதியில் உள்ள மதுக்கடைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளனா். அங்குள்ள மதுக்கூடத்தில் பிற்பகல் 3 மணி அளவில் மது அருந்தியுள்ளனா்.

Advertisement

அப்போது அங்கு ஊழியராகப் பணிபுரிந்த சுந்தர்ராஜுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனா். இருவரும் சோ்ந்து சுந்தர்ராஜை சுவரில் தள்ளி நெஞ்சு பகுதியில் குத்தியுள்ளனா். இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்து ஹெரைட்டிஹால் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதையடுத்து பிரபு, மனோஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.