முகப்பு
ஈரோடு

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளையொட்டி, அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On : 19 ஏப்ரல் 2018, 1:20 am IST
பகிர்:

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளையொட்டி, அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஈரோடு கொங்கு கலையரங்க வளாகத்தில், கொங்கு வேளாளர் இளைஞர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இவ்விழாவுக்கு, சங்கத் தலைவர் சி.முத்துசாமி தலைமை வகித்து தீரன் சின்னமலையின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்தார். இதைத் தொடர்ந்து, செயலாளர் ஆர்.சின்னசாமி, பொருளாளர் பி.திருமலை உள்ளிட்டோர் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். தீரன் சின்னமலையின் சுதந்திரப் போராட்ட தியாகங்கள் குறித்து  நிர்வாகிகள் நினைவுகூர்ந்து பேசினர். இதில், திரளான நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.