முகப்பு
ஈரோடு

மொடக்குறிச்சி தொகுதியில் ரூ. 1.58 கோடியில் நலத்திட்டப் பணிகள் துவக்கம்

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 1.58 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணிகள் அமைப்பதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 1.58 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணிகள் அமைப்பதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. 
தமிழ்நாடு ஊரக சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வேலாங்குட்டை முதல் தலவுமலை வரை ரூ. 48 லட்சம் மதிப்பிலும், 60 வேலம்பாளையம் முதல் பூமாண்டவலசு வரை ரூ. 18.15 லட்சம் மதிப்பிலும்,  லக்காபுரம் புதுவலசு முதல் கரூர் சாலை வரைரூ.  18.20 லட்சம் மதிப்பிலும்,  பழமங்கலம் ஊராட்சி,  சுக்கிரமணியம்பாளையத்தில்  ரூ. 38.10 லட்சம் மதிப்பிலும்,  ஈஞ்சம்பள்ளி ஊராட்சி, வாத்தியார் காட்டுவலசு சாலை முதல் மடத்துப்பாளையம் வரை ரூ. 28.10 லட்சம் மதிப்பிலும் புதிய தார் சாலைகள் அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது.
இதில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி கலந்து கொண்டு பூமிபூஜைகள் செய்து பணிகளைத் துவக்கிவைத்தார். 
நிகழ்ச்சியில்,  மொடக்குறிச்சி ஒன்றிய  அதிமுக செயலாளர் ஆர்.பி.கதிர்வேல்,  மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவர் கணபதி,  ஆவின் இயக்குநர் அசோக்,  சின்னதிருமங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் பி.சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

முழு கட்டுரையைப் படிக்க →