முகப்பு
ஈரோடு

சத்தியமங்கலம் அருகே இளம்பெண் மாயம்

சத்தியமங்கலம் அருகே இளம்பெண் மாயமானது குறித்து கடத்தூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On : 4 செப்டம்பர், 2018 at 1:14 AM
பகிர்:

சத்தியமங்கலம் அருகே இளம்பெண் மாயமானது குறித்து கடத்தூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பவானிசாகர் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.ஈஸ்வரனுக்கும், சத்தியமங்கலத்தை அடுத்த மில்மேட்டை சேர்ந்த சந்தியாவுக்கும் (23) திருமணம் நிச்சயிக்கப்பட்டு, பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செப்டம்பர் 12 ஆம் தேதி திருமணம் நடக்கவிருந்தது. 
இந்நிலையில், திருமண அழைப்பிதழ் வழங்கப்போவதாகக் கூறிவிட்டு சத்தியமங்கலத்துக்கு சனிக்கிழமை சென்ற சந்தியா வீடு திரும்பவில்லை. கடந்த இரு நாள்களாக பெற்றோர் தேடிப் பார்த்தும் சந்தியா கிடைக்காததால், அவரது தாய் தங்கமணி கடத்தூர் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் தெரிவித்தார். அதில், திருப்பூர், ஊத்துக்குளியைச் சேர்ந்த இளைஞருடன் சந்தியா பழகி வந்ததாகவும், மகளைக் கண்டுபிடித்து தருமாறும் புகார் தெரிவித்துள்ளார்.
புகாரின்பேரில், கடத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சந்தியாவை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.