ஈரோட்டில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா: எம்எல்ஏ ரத்த தானம்
ஜெயலலிதா பிறந்த தினத்தை ஒட்டி ஈரோடு மேற்குத் தொகுதி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினரும்,
ஜெயலலிதா பிறந்த தினத்தை ஒட்டி ஈரோடு மேற்குத் தொகுதி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினரும், அதிமுக ஈரோடு மாநகர் மாவட்டச் செயலருமான கே.வி.ராமலிங்கம் ரத்த தானம் அளித்தார்.
மாவட்ட அதிமுக சார்பில், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி, மாநிலங்களவை உறுப்பினர் சி.செல்வக்குமார சின்னையன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து ஈரோடு அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமுக்கு பெரியார் நகர் பகுதிச் செயலர் மனோகரன் தலைமை வகித்தார் சட்டப் பேரவை உறுப்பினர் கே.வி.ராமலிங்கம் முகாமைத் தொடங்கிவைத்து ரத்த தானம் அளித்தார். மேலும் ஏராளமான அதிமுக தொண்டர்களும் ரத்த தானம் செய்தனர்.
இதையடுத்து, மாவட்ட மாணவரணி சார்பில், அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. விழாவில் அதிமுக பகுதிச் செயலர்கள் கே.சி.பழனிசாமி, ஜெகதீஷ், மாணவரணி மாவட்டச் செயலர் ரத்தன் பிரித்வி, இணைச்செயலர் நந்தகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.