ஈரோடு

பவானியில் உணவு வணிகர்களுக்கான பதிவுச் சான்று முகாம்

பவானியில் உணவு வணிகர்களுக்கான உரிமம், பதிவுச் சான்று பெறுதல், புதுப்பித்தல் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

DIN

பவானியில் உணவு வணிகர்களுக்கான உரிமம், பதிவுச் சான்று பெறுதல், புதுப்பித்தல் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
ஈரோடு மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை, பவானி வட்டார அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இணைந்து நடத்திய இம்முகாமிற்கு, ஈரோடு மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் கே.கலைவாணி தலைமை வகித்து, பிளாஸ்டிக் தடை குறித்த   சிறப்பு கண்காட்சியைத் திறந்து வைத்துப் பேசினார். 
பவானி நகரம், ஈரோடு வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் முத்துகிருஷ்ணன் வணிகர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்றுக் கொண்டார். 
தொடர்ந்து, தமிழக அரசு தடை விதித்துள்ள பொருள்கள், பயன்படுத்த வேண்டிய பொருள்கள் குறித்தும், உணவுப் பாதுகாப்புச் சட்டம் குறித்தும் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. 
முகாமில், புதிதாகப் பதிவு செய்ய 107 விண்ணப்பங்களும், புதுப்பிக்க 59 விண்ணப்பங்களும் என மொத்தம் 166 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பவானி கிளைத் தலைவர் சுந்தரராஜன், செயலாளர் காதர் அலி பாபு, பொருளாளர் கனகராஜ், பவானி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் தலைவர் ஜி.சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

தருமபுரியில் டிச. 29-இல் அஞ்சல் துறை குறைகேட்பு கூட்டம்

அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்: அன்பழகன் நம்பிக்கை

அம்பலவாணன்பேட்டை அரசுப் பள்ளிக்கு பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு

விராலிமலை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மீது காா் மோதி தீக்கிரை

SCROLL FOR NEXT