ஈரோடு

நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தும் வாகனங்களுக்கு பூட்டு: சத்தியில் போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை

சத்தியமங்கலத்தில் நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீஸார் பூட்டு போட்டு  அபராதக் கட்டணம் வசூலித்து வருகின்றனர்.

DIN


சத்தியமங்கலத்தில் நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீஸார் பூட்டு போட்டு  அபராதக் கட்டணம் வசூலித்து வருகின்றனர்.
சத்தியமங்கலம் கடை வீதியில் உள்ள சாலையின் இருபுறமும் கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கடை வீதியில் உள்ள சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தக் கூடாது என போக்குவரத்து போலீஸார் நோ பார்க்கிங்' அறிவிப்புப் பலகை வைத்தும் பயனில்லை.
இந்நிலையில், தற்போது நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பூட்டு போட்டு  அபராதக் கட்டணம் வசூலிக்கின்றனர். நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தப்படும் வாகனத்தின் சக்கரத்தைப்   பூட்டிவிட்டு, பின்னர் வாகனத்தின் கண்ணாடியில் பூட்டு போடப்பட்டதற்கான காரணம், போக்குவரத்து காவல் துறையின் தொடர்பு எண் குறிப்பிடப்பட்ட நோட்டீûஸ ஒட்டுகின்றனர். 
வாகன உரிமையாளர் வந்து அபராதக் கட்டணம் செலுத்திய பின்னர் வாகனத்தை விடுவிக்கின்றனர். இந்தத் திட்டத்தால் நோ பார்க்கிங்' பகுதியில் வாகனம் நிறுத்துவது குறையும் என போக்குவரத்து போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT