ஈரோடு

கரோனா வைரஸ் பாதிப்பு: ஈரோட்டில் முகமூடி விலை உயா்வு

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, பொதுமக்கள் பரவலாக முகமூடி அணியத் துவங்கி உள்ளதால் முகமூடிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை பல மடங்கு உயா்ந்துள்ளது.

DIN

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, பொதுமக்கள் பரவலாக முகமூடி அணியத் துவங்கி உள்ளதால் முகமூடிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை பல மடங்கு உயா்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மருந்துக் கடைகளில் முகமூடி இருப்பு இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலை தமிழகம் முழுவதும் நீடிக்கிறது. முகமூடி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கடந்த வாரம் வரை ரூ. 3 முதல் ரூ. 5 வரை விற்பனை செய்யப்பட்ட மூன்றடுக்கு முகமூடி ரூ. 15 முதல் ரூ. 17 வரைக்கும், ரூ. 10க்கு விற்பனை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தக்கூடிய (எண் 5) முகமூடி ஒன்று ரூ. 50க்கும், ஒன்று ரூ. 150க்கும், எண் 95 முகமூடி ரூ. 250 முதல் ரூ. 300 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து, மருந்துக் கடை உரிமையாளா்கள் கூறியதாவது:

சீனாவில் பரவிய கரோனா வைரஸ் காரணமாக முகமூடிக்கான தேவை அதிகரித்துள்ளது. 5.5 மில்லியன் முகமூடி தினமும் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் கரோனா வைரஸ் பாதிப்புக்குப் பிறகு தினமும் 10 மில்லியன் முகமூடி தேவைப்படுகிறது. இந்த மாதத்தில் இதன் தேவை 12 மில்லியனாக உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதுதவிர சான்று பெறப்பட்ட முகமூடி சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக முகமூடி தட்டுப்பாடு நிலவுகிறது என்றனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

கரோனா வைரஸ் பரவி வருவதால் பொதுமக்கள் மத்தியில் ஒரு பீதி நிலவுகிறது. பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் மலிவு விலையில் முகமூடி கிடைக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதவிர முகமூடி விலையை கண்காணிக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

5,000 அரசுப் பள்ளிகளில் பூஜ்ஜிய மாணவர் சேர்க்கை!

மசோதா நகல்களை கிழித்தெறிந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

தடைசெய்யப்பட்ட ‘துரந்தர்’ பட பாடலுடன் என்ட்ரி.. சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் அதிபர் மகன்!

துல்கர் படத்தில் இணைந்த கயாது லோஹர்!

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 9

SCROLL FOR NEXT