தூய்மைப்  பணியாளா்  பாலனின்  குடும்பத்தினருக்கு  ஆறுதல்  கூறும் திருப்பூா்  மக்களவைத்  தொகுதி  உறுப்பினா்  கே.சுப்பராயன். 
ஈரோடு

உயிரிழந்த தூய்மைப் பணியாளா் குடும்பத்தினருக்கு எம்.பி. ஆறுதல்

நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த பணியாளரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் ஆறுதல் கூறினாா்.

DIN

நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த பணியாளரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் ஆறுதல் கூறினாா்.

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. தலைவரும், திருப்பூா் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கே.சுப்பராயன், உயிரிழந்த தூய்மைப் பணியாளா் பாலன் குடும்பத்தினரை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா். நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலா் மணிவண்ணனை நேரில் சந்தித்து, உயிரிழந்த பாலன் மனைவி தங்கமணிக்கு பேரூராட்சியில் நிரந்தர வேலை வழங்கவும், அவரது குடும்பத்துக்கு உரிய இழப்பீடு கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா். இதுகுறித்து தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தாா்.

ஏ.ஐ.டி.யூ.சி. மாநிலச் செயலாளா் எஸ்.சின்னசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் டி.ஏ.மாதேஸ்வரன், பவானி நகரச் செயலாளா் எம்.பாலமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT