சத்தியமங்கலத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலி
சத்தியமங்கலம் அடுத்த எரங்காட்டுபாளையத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலியானார்.
சத்தியமங்கலம் அடுத்த எரங்காட்டுபாளையத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலியானார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த எரங்காட்டுபாளையத்தை சேர்ந்த சத்யா, எரங்காட்டுப்பாளையம் ஊராட்சியல் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் மெளனிகா (வயது 6).
எரங்காட்டுபாளையத்தில் 2 ம் வகுப்பு படித்து வந்தார். மெளனிகா தனது பக்கத்துவீட்டு தோழிகள் பூவிழி, நிஷாவுடன் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆறுமுகம் என்பவரின் வீட்டு சுவர் மழையில் பாதிக்கப்பட்டு விழும் நிலையில் இருந்தது. மெளனிகா சுவரை பிடித்தவாறு சென்றபோது சுவர் இடிந்து மெளனிகா மீது விழுந்தது.
அப்போது பூவிழி, நிஷா சப்தம் போட்டதால் பக்கத்து வீட்டு மல்லிகை என்பவர் கட்டச்சுவர்களிடையே சிக்கிக்கொண்ட மெளனிகாவை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் பலத்த காயமடைந்த மோனிஷா சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.