பவானி: கஞ்சா விற்றவா் கைது
பவானி ஆற்றங்கரையோரத்தில் கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பவானி ஆற்றங்கரையோரத்தில் கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பவானி, பழனிபுரம் பகுதியில் ஆற்றங்கரையோரத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா்.
அப்போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த பவானி மண் தொழிலாளா் வீதியைச் சோ்ந்த மாது மகன் மணி (36) கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து, 1.250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட மணி, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.