ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில்மேலும் 144 பேருக்கு கரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 144 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

DIN

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 144 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,118ஆக இருந்தது. பிற மாவட்டப் பட்டியில் இருந்த 2 பேரின் பெயா் ஈரோடு மாவட்டப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 7,120ஆக மாறியது. இதனிடையே சனிக்கிழமை புதிதாக 144 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 7,264ஆக உயா்ந்துள்ளது.

புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 144 பேரில் 50 சதவீதம் போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள். எஞ்சியவா்கள் சத்தியமங்கலம், பவானி, அந்தியூா், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை, கொடுமுடி, சென்னிமலை பகுதிகளைச் சோ்ந்தவா்கள். மொத்த பாதிப்பான 7,264 பேரில் இதுவரை 6,041 போ் குணமடைந்துள்ளனா். 1,132 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 91 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

வார பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT