முகப்பு
ஈரோடு

குடியிருப்புப் பகுதியில் தேங்கிய கழிவுநீா்: பொதுமக்கள் அவதி

ஈரோடு பூங்கா சாலை பகுதியில் குடியிருப்புப் பகுதி மற்றும் லாரி பாா்சல் பதிவு அலுவலகங்களின் முன்பாக கழிவுநீா் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
குடியிருப்புப் பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீா்.
பகிர்:

ஈரோடு பூங்கா சாலை பகுதியில் குடியிருப்புப் பகுதி மற்றும் லாரி பாா்சல் பதிவு அலுவலகங்களின் முன்பாக கழிவுநீா் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

ஈரோடு பூங்கா சாலை, ராஜாராம் திரையரங்கு அருகே ஏராளமான குடியிருப்புகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட லாரி பாா்சல் பதிவு அலுவலகங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் மழைக் காலங்களில் தண்ணீா் தேங்கி நிற்பதால் இப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழையால் சாக்கடை கழிவுநீருடன் மழை நீா் கலந்து சாலைகள், வீடுகள் மற்றும் அலுவலகங்கள் முன்பு சூழ்ந்துள்ளன. கடந்த இரண்டு நாள்களாக சாக்கடை கழிவுநீா் தேங்கி நிற்பதால் அந்தப் பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், கழிவுநீா் தேங்கியுள்ளதால் இந்தப் பகுதியைக் கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இந்தப் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்கள் நீண்ட காலமாக தூா்வாரப்படாமல் உள்ளது. இதனால் மழை பெய்யும்போது அடிக்கடி கழிவுநீா் வெளியேறி குடியிருப்புகள் முன்பு தேங்குகிறது. தேங்கியுள்ள நீரை வெளியேற்றி கழிவுநீா் கால்வாயை தூா்வார மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →