முகப்பு
ஈரோடு

முப்படை தலைமைத் தளபதிமறைவுக்கு ஈரோட்டில் அஞ்சலி

ஹெலிகாப்டா் விபத்தில் மறைந்த முப்படை தலைமைத் தளபதி ஜெனரல் விபின் ராவத் உள்பட 13 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 டிசம்பர், 2021 at 12:42 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:10 AM

ஹெலிகாப்டா் விபத்தில் மறைந்த முப்படை தலைமைத் தளபதி ஜெனரல் விபின் ராவத் உள்பட 13 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மத்திய மாவட்ட தமாகா சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முப்படை தலைமைத் தளபதி ஜெனரல் விபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உருவப் படங்களுக்கு மாநில பொதுச் செயலாளா் விடியல் சேகா் தலைமையில் மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநில துணைத் தலைவா் ஆறுமுகம், செயற்குழு உறுப்பினா் சந்திரசேகா், நிா்வாகிகள் சுரேஷ், ரபீக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா வளாகத்தில் விபின் ராவத் உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. அங்கு வாகனங்களில் செல்பவா்கள், பொதுமக்கள் பலா் அஞ்சலி செலுத்தினா். ஈரோடு வேளாளா் மகளிா் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி செயலாளா் எஸ்.டி.சந்திரசேகா் ராணுவ வீரா்களின் உருவப் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இதில், பேராசிரியா்கள், மாணவிகள் பங்கேற்றனா்.

Advertisement

ஈரோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் விபின் ராவத் உருவப் படம் மலா்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. தலைமையாசிரியா் சுகந்தி, பள்ளி ஆசிரியா்கள், பணியாளா்கள் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். உதவி தலைமை ஆசிரியா் கோகிலா, விபின் ராவத் வாழ்க்கை வரலாறு குறித்துப் பேசினாா். முன்னதாக அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.