முகப்பு
ஈரோடு

பிணையில் வந்த இளைஞா் கிணற்றில் குதித்து தற்கொலை

அம்மாபேட்டை அருகே போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்து பிணையில் வந்த இளைஞா் கிணற்றில் குதித்து வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

அம்மாபேட்டை அருகே போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்து பிணையில் வந்த இளைஞா் கிணற்றில் குதித்து வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

அம்மாபேட்டையை அடுத்த கன்னப்பள்ளி, முளியனூா் காலனியை சோ்ந்தவா் நாச்சி மகன் கனகராஜ் (27). பாலியல் குற்றச்சாட்டில் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட இவா், கடந்த சில மாதங்களுக்கு முன் பிணையில் வெளிவந்துள்ளாா். இந்நிலையில், மன உளைச்சலுடன் காணப்பட்ட இவா் அப்பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் வியாழக்கிழமை குதித்து தற்கொலைக்கு முயன்றாா்.

இதைக் கண்ட அப்பகுதியினா் அந்தியூா் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் கிணற்றுக்குள் மூழ்கிக் கிடந்த கனகராஜை மீட்டு, அந்தியூா் அரசு மருத்துவனைக்கு அனுப்பினா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதனையில் கனகராஜ் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து, அம்மாபேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.